கர்நாடகத்தில் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!

கர்நாடகாவில் மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2022, 12:38 PM IST
  • கர்நாடகாவில் தொடரும் ஹிஜாப் பிரச்னை
  • மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து மோதல்
  • கல்லாரிகளுக்கு விடுமுறை
கர்நாடகத்தில் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்! title=

கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகள் அனுமதி மறுக்கப்பட்டதால், இன்றும் தங்கள் போராட்டங்களை தொடர்ந்தனர். இதையடுத்து மாநிலத்தில் பல மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப் சர்ச்சை நீடிக்கிறது. இது நாளுக்கு நாள் மோசமாகி அரசுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.  மாநிலத்தின் பல பகுதிகளில் ஹிஜாப் அணிந்த மாணவர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதி மறுக்கப்படுவதால், பெற்றோருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெலகாவியில் உள்ள போரலிங்கயா மருத்துவக் கல்லூரியில் ஹிஜாப் மோதலாக வெடித்தது, இதில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பெல்லாரியில் உள்ள சரளாதேவி கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகக் குழு அனுமதி மறுத்துள்ளது.  இன்ஸ்பெக்டரிடம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் வாக்குவாதம் செய்தனர்.  இதனால் கல்லூரி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முஸ்லீம் இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், எஸ்.டி.பி.ஐ-யின் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு  அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் வாய் தகராறு ஏற்பட்டு, பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.  ஹிஜாப் தொடர்பான இடைக்கால உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதை போராட்டக்காரர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது. ஷிமோகாவில் கமலநாஹரு கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிந்து நுழைய அனுமதி மறுத்தது. ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். 

ஏவிகே கல்லூரி மாணவர்கள் பலர் ஹிஜாப் அணிந்திருந்தனர்.  அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினர். உரிமைக்காக மாணவர்கள் போராடுவார்கள்.  ஆனால், சிலர் எங்கள் கோரிக்கையை திசை திருப்புகின்றனர் கல்வி நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது ஹிஜாப் என்று ஆவேசமாக கூறினார். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான பியூசி கல்லூரியில், கேட் அருகே மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை நிர்வாகம் தடுத்துள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், வாயிலில் அமர்ந்து படித்து மறியலில் ஈடுபட்டனர். ஹிஜாப் விவகாரத்தால் கடும் சர்ச்சைக்குள்ளான உடுப்பி எம்ஜிஎம் கல்லூரி பியுசி தேர்வை ஒத்திவைத்துள்ளது.  ஜி.  சங்கர் அரசு மகளிர் பட்டதாரி கல்லூரியில் ஹிஜாப் குழப்பம் நீடிக்கிறது. ஆன்லைன் வகுப்பு நடத்துமாறு மாணவர்கள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  வகுப்புகளுக்கு அனுமதி மறுப்பது கவலை அளிப்பதாகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாதகிரி சிட்டி நியூ கன்னட கல்லூரியில் ஹிஜாப் சர்ச்சை தொடர்கிறது. ஹிஜாப் இல்லாமல் மாணவர்களை வகுப்பறைக்குள் வரவேண்டும் என்று கூறினர். ஆனால் இதற்கு மாணவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் 12க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையை புறக்கணித்துவிட்டு வீட்டுக்குச் சென்றனர். ஹிஜாப் மோதல் ராய்ச்சூர், ஹூப்ளி, கொப்பல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஹிஜாப் மோதல் நீடிக்கிறது. ஜகத்குரு  வித்யார்த்திகா சங்க கலை மற்றும் வணிகக் கல்லூரி, ஹூப்ளி, ஜேசி நகரில்  நேற்று பரபரப்பான சூழல் நிலவியதால் இன்று அனைத்து பள்ளி-கல்லூரிகளிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அன்றைய தினம் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் காவி ஏற்றும் நாள் வரும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. 

இதன் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அமைச்சர் ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியது. இதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். அமைச்சர் ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சபை முடங்கியது. சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். அமைச்சர் ஈசுவரப்பா, தேசத்துரோகி, அவரை பதவி நீக்க வேண்டும், நியாயம் வேண்டும், நீதி வேண்டும், தேசத்துரோக பா.ஜனதா அரசு என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டுவதாக இருந்தது.

karnataka

அந்த கடும் அமளிக்கு இடையே கேள்வி நேரத்திற்கு சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். அதில் பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர். ஆனால் காங்கிரசாரின் கோஷத்தால் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் கேள்வி நேரம் அரை மணி நேரம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிவடைவந்த பிறகு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து பூர்வமான பதிலளிக்கப்பட்டது. அதன் பிறகு வருவாய்த்துறை அமைச்சர் கர்நாடக முத்திரைத்தாள் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசுமாறு சபாநாயகர் அழைத்தார். ஆனால் சித்தராமையா பேசவில்லை.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

இதையடுத்து சபையை மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார். சபை மீண்டும் 3 மணிக்கு தொடங்கியது. அப்போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. சபாநாயகர் காகேரி பேசுகையில், "காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பி சபை நிகழ்வுகள் சரியாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் நீங்கள் பேசலாம். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் இதற்காக நீங்கள் சபையில் போராடுவது சரியல்ல. சபை நடவடிக்கைகளில் நீங்கள் பங்கேற்க வேண்டும். சபைக்கு வெளியே போய் போராட்டம் நடத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்படியபடி இருந்தனர். இதனால் சபையில் அமளில் உண்டானது. 

இதையடுத்து சபையை சபாநாயகர் காகேரி இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது. அதே போல் மேல்-சபைலும் அமைச்சர் ஈசுவரப்பாவை நீக்க கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்தினர். இதையடுத்து சபை மதியத்திற்கு மேல் ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும், ஈசுவரப்பாவின் கருத்து குறித்து விவாதம் நடைபெற்றது. நேற்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டி கே சிவகுமார் தலைமையில் பெண் எம்எல்ஏக்கள் உள்பட பலர் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் இன்று காலை அவர்கள் சட்டசபை வளாகத்தில் தினசரி காலை பேப்பர்களை படித்துக் கொண்டிருந்தனர் இன்று ஐந்தாவது நாளாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: உடுப்பியில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News