காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.
தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. சிறப்பு அந்தஸ்தை நீக்கி 40 நாட்கள் கடந்த பிறகும் அங்கு நிலைமை சீராகவில்லை. பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. பல்வேறு பகுதிகளில் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; நான் பள்ளிக்குச் செல்ல முடியாததால் நோக்கமில்லாமலும் மனச்சோர்வாகவும் உணர்கிறேன். ஆகஸ்ட் 12 ஆம் தேதி எனது தேர்வுகளைத் தவறவிட்டேன், இப்போது எனது எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன். நான் ஒரு எழுத்தாளராக இருந்து ஒரு சுயோட்சையான, வெற்றிகரமான காஷ்மீர் பெண்ணாக வளர விரும்புகிறேன். ஆனால், இந்த நிலை தொடர்ந்தாள் எனவு கனவுகள் நிறைவேறுவது கடினம்.
I am asking leaders, at #UNGA and beyond, to work towards peace in Kashmir, listen to Kashmiri voices and help children go safely back to school.
— Malala (@Malala) September 14, 2019
மேலும், காஷ்மீரில் அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் குரல்களை செவிமடுத்து கேட்க வேண்டும். மேலும், 40 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.