இந்தியாவில் கொரோனாவினால் 10 மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாட்டில்  தொற்று ஏற்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2020, 06:38 PM IST
  • கொரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டது.
  • தமிழ்நாட்டில் குணமடையும் விகிதம் 65 சதவீதமாக உள்ளது
  • இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியது.
இந்தியாவில்  கொரோனாவினால் 10 மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை title=

நாட்டில்  தொற்று ஏற்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் COVID-19 தொற்று ஏற்பட்டவர்களில் 86 சதவிகிதம் பேர் 10 மாநிலங்களில் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன என்று சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

ALSO READ | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு…. Railway துறையின் அசத்தல் திட்டம்..!!

 

நாட்டிலுள்ள கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரியான ராஜேஷ் பூஷன், நாட்டிலுள்ள 86 சதவீத தொற்று பாதிப்புகள் 10 மாநிலங்களில் தான் உள்ளன என்று கூறினார். இதில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் 50 சதவீத பாதிப்புகள் உள்ளன என்றும் 36% பேர் மீதமுள்ள 8 மாநிலங்களை  சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

மீதமுள்ள 8 மாநிலங்கள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத், அஸ்ஸாம், யூனியன் பிரதேசமான தில்லி ஆகியவை.

நாட்டில் Covid-19 தொற்று நோயிலிருந்து குணமானவர்களின் சராசரி சதவீதம் 63% ஆக உள்ளது என்றும் நாட்டிலுள்ள 20 மாநிலங்களில் குணமடைந்தவர்களின் விகிதம் சராசரி அளவை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மே மாதத்தில் குண மாணவர்களின் சதவிகிதம் 26 சதவீதமாக இருந்தது என்றும், மே மாத இறுதியில் அது 48 சதவீதமாக உயர்ந்தது என்றும் சுகாதார துறை அதிகாரி கூறினார். ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்றைய நிலவரப்படி, குணமடையும் விகிதம் 63 சதவீதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஷ் புருஷன் தெரிவித்தார்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குணமடையும் விகிதம் 64 சதவீதமாக உள்ளது. ஒடிஷா மாநிலத்தில் குணம் அடையும் விகிதம் 67 சதவீதமாக உள்ளது. அசாமில் 65% மற்றும் குஜராத்தில் 70 சதவீதம் என குணமடையும் விகிதம் உள்ளது. தமிழ்நாட்டில் குணமடையும் விகிதம் 65 சதவீதமாக உள்ளது என்றும் பூஷன் குறிப்பிட்டார்.

ALSO READ | ஸ்ரீபத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு: SC

மே மாதம் இரண்டாம் தேதி முதல் மே மாதம் 30ஆம் தேதி வரை, ஆக்டிங் நோயாளிகளின் எண்ணிக்கை குணமடைந்தவர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு ஆக்டிவ் நோயாளிகளை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சுகாதார துறை அதிகாரி குறிப்பிட்டார். ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.8 மடங்கு அதிகமாக உள்ளது. முன்னதாக இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியது. இன்று புதிதாக 28 ஆயிரத்து 498 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

Trending News