ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர் ஹவால்தார் உடல் சம்பாவில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களில் ஒருவரான ஹவால்தார் ரோஷன் லால் உடலுக்கு, சம்பா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகக்கடுமையான மார்ட்டர் குண்டுவீச்சுத் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர்.
Mortal remains of Havaldar Roshan Lal brought to his home in Samba; he lost his life in ceasefire violation by Pakistan in BG sector of Rajouri district yesterday #JammuAndKashmir pic.twitter.com/cP2cg8PVFp
— ANI (@ANI) February 5, 2018
ஷாப்பூர் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றம் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் மஞ்சகோட், நவ்ஷேரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். மஞ்சகோட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட இந்தியா ராணுவத்தினர் மூன்று பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி காயம் அடைந்தனர்.
பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த மோதல் இருதரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் தொடர்ந்து நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.