சபரிமலை சன்னிதானத்தில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும், சபரிமலை ஐயப்பன் புகழை பாடும் பாடகர்களுக்கு கேரள அரசு ஹரிவராசனம் எனும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுசபரிமலை குறித்த மதநல்லிணக்கத்தையும், உலக சகோதரத்துவத்தையும் பாடல்களின் மூலமாக பரப்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு ஹரிவராசனம்விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்திருந்தது.
இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. அந்தவகையில் இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.