உத்திர பிரதேசத்தில் முதியவர் ஒருவரை, பசு வதை செய்தேன் என ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி மர்ம கும்பல் ஒன்று அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!
உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாபூர் நகரைச் சேர்ந்த பசேடா என்னும் கிராமத்தில் கடந்த 18-ஆம் நாள் சமயுதீன்(65) என்ற முதியவரை, இளைஞர்கள் கும்பல் ஒன்று பசு வதை செய்தேன் என ஒத்து கொள்ள கட்டாயப்படுத்தி அடித்து துன்புறுத்தியுது. தன்னை தாக்கிய கும்பலிடம் தன்னை விட்டு விடும்படி அவர் கெஞ்சி அழுகின்றார்.
இந்த சம்பவத்தில் தலையில் காயம் அடைந்து ரத்தம் வழிய அந்த முதியவர் பேசும் காட்சி அனைவரது உள்ளத்தையும் கரைக்கின்றது. இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையினை கிளப்பி வருகின்றது.
Cow terrorists had attacked 2 persons in Hapur on 18 June.
This old man is Saimuddin (65yo), he was attacked along with Qasim, he is in ICU now .
Watch this Video that how Cow terrorists manhandled him .
Note :- use Headphone . pic.twitter.com/qeQ4ccrwxf
— Md Asif Khan (@imMAK02) June 22, 2018
இதற்கு முன்னதாக கடந்த வாரம் இதேபோன்று மற்றொரு வீடியோவும் வெளியானது. அதில் வயல்வெளியில் நபர் ஒருவர் பல்வேறு காயங்களுடன் கிடக்கிறார். இளைஞர் கும்பல் அவரை தாக்க தாங்க முடியாமல் அவர் கதறும் காட்சி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தற்போது இரண்டாவதாக இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!