புதுடெல்லி: தொழில்நுட்பத் துறையின் பெரிய சீர்திருத்தத்தில், ஐடி மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து நிரந்தர வேலை செய்ய உதவும் வகையில், அரசாங்கம் வியாழக்கிழமை (நவம்பர் 6) பதிவு மற்றும் இணக்கத் தேவைகளை நீக்கிவிட்டது.
இதற்கான புதிய விதிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும், எங்கிருந்தும் வேலை செய்வதற்கும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும். அதே நேரத்தில் புதில விதிகள் அத்தகைய நிறுவனங்களுக்கான பல அறிக்கையிடல் மற்றும் பிற கடமைகளளையும் நீக்குகிறது.
இது தொழில்துறைக்கு வலுவான உத்வேகத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும் இந்த விதி, இந்தியாவை (India) உலகின் மிகவும் போட்டி நிறைந்த தகவல் தொழில்நுட்ப அதிகார வரம்புகளில் ஒன்றாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
பிபிஓ தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான எளிமையான வழிகாட்டுதல்களை அரசாங்கம் அறிவித்ததோடு, இந்தியாவில் வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கு உகந்த சூழலை உறுதி செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கூறினார். "தரவு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள பிபிஓ தொழில் ஓஎஸ்பி விதிமுறைகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது" என்று தொடர்ச்சியான ட்வீட்டுகளில் மோடி தெரிவித்தார்.
தொழில்துறைக்கான இணக்கச் சுமையைக் குறைக்க வணிக செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) மற்றும் ஐடி-இயக்கப்பட்ட சேவைகள் (ITES) நிறுவனங்களுக்கான எளிமையான வழிகாட்டுதல்களை தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்த உடனேயே இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
"'Ease of doing business’ அதாவது ‘தொழில் செய்ய ஏற்ற நாடு’ என்ற நிலையை ஏதுவாக்கவும் இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாற்றவும் உறுதியாக உள்ளோம்!" என்று மோடி ட்வீட் செய்துள்ளார். "தொலைத்தொடர்பு துறையின் பிற சேவை வழங்குநர் (OSP) வழிகாட்டுதல்களை இந்திய அரசாங்கம் கணிசமாக எளிமைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிபிஓ தொழிற்துறையின் இணக்க சுமைகள் பெரிதும் குறைக்கப்படும்." என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ALSO READ: சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் வேலைகளில் 75% இடஒதுக்கீடு..!
"வேறு பல தேவையற்ற விதிமுறைகள் நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் மேலும் நெகிழ்வுத்தன்மையையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.
OSP கள் என்பது பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட அல்லது தொலைதொடர்பு வளங்களைப் பயன்படுத்தி எந்த வகையான அவுட்சோர்சிங் சேவைகளையும் வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இந்த சொல் BPO-க்கள், KPO-க்கள் (அறிவு செயல்முறை அவுட்சோர்சிங்), ITES, கால் செண்டர்கள் போன்றவற்றைக் குறிக்கிறது.
"இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை எங்கள் பெருமை. இந்தத் துறையின் வலிமை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று மோடி கூறினார். "இந்தியாவில் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உகந்த சூழலை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்றைய முடிவுகள் குறிப்பாக இந்தத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்கும்!" என்றார் பிரதமர்.
OSP களுக்கான ஒழுங்குமுறை விதிகளை தாராளமயமாக்க அரசு ஒரு பெரிய சீர்திருத்த முயற்சியை எடுத்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்வீட் செய்துள்ளார். "இது ஐடி / ஐடிஎஸ் / பிபிஓ தொழிற்துறையை உயர்த்துவதோடு, இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான (Work from Home) நட்புரீதியான செயல்முறையை உருவாக்கும். #DigitalIndia" என்று அவர் ட்வீட் செய்தார்.
ALSO READ: தனியார் துறை பணியாளர்களுக்கு good news காத்திருக்கிறது: ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR