தெலங்கானா மாநிலம் குண்டக்கட்டு மலைப்பாதையில் சென்ற அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 57 பேர் உயிரிழந்தனர்கள். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் குண்டக்கட்டு மலைப்பாதையில் நேற்று காலை சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீர் என கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனே வந்து, சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு மீட்புகுழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்தன. மீட்புபணி மேற்கொள்ளப்பட்டு, காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் பரிதாபமாக 57 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்தது பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,
தெலுங்கானா மாநில பேருந்து விபத்தில் 57 உயிர்கள் பறிபோனது மிகுந்த மனவேதனை அளிக்கிறது..
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ் சொந்தங்களின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்..— G.V.Prakash Kumar (@gvprakash) September 12, 2018
"தெலுங்கானா மாநில பேருந்து விபத்தில் 57 உயிர்கள் பறிபோனது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ் சொந்தங்களின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்"