வரும் அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடிகள், சலுகைகளை பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளனன.
தொடர்ந்து, தீபாவளிக்கு அரசு பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அரசு மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது.
அந்த வகையில், குஜராத் மக்களுக்கு தீபாவாளி பரிசை அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. அதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"பிரதமர் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி ரேஷன் கடைகளில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும்
இதனால், 38 லட்சம் பேர் ஓராண்டுக்கு தலா 2 சிலிண்டர்கள் இலவசமாக பெற்று பயனடைவார்கள். மேலும், சிஎன்ஜி, பிஎன்ஜி எரிவாயுக்களில் மதிப்பு கூட்டப்பட்ட வரிகளில் 10 சதவீதத்தை குறைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதனால், சிஎன்ஜி எரிவாயு கிலோவுக்கு 7 ரூபாய் அளவிலும், பிஎன்ஜி எரிவாயு SCM (Standard Cubic metre) அளவிற்கு 6 ரூபாயும் குறைய வாப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த எரிவாயுகளுக்கான மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைப்பதன் மூலம் 14 லட்ச வாகன உரிமையாளர்கள் பயனைடவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
2 சிலிண்டர்களை இலவசமாக பெறுவதன் மூலம் மாதம் 1600 ரூபாய் அளவிலும், எரிவாயுகளின் வரி குறைப்பின் மூலம் மாதம் 60 முதல் 150 ரூபாய் அளவிலும் மக்களால் சேமிக்க முடியும் என்றும், இது நடுத்தர வர்க்கத்துக்கு மிகவும் பயனளிக்கு்ம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சமையல் எரிவாயு சிலிண்டனர் இந்தியா முழுவதும் 1050 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதில், தலா 200 ரூபாய் மானியமாக வழக்கப்படுகிறது. இந்த வரிகுறைப்பின் மூலம் குஜராத் அரசுக்கு கூடுதலாக ரூ. 1,650 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான தீபாவளி பரிசு என குஜராத் கல்வித்துறை அமைச்சரும், அரசின் செய்தித்தொடர்பாளருமான ஜிது வகானி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிரதமர் மோடி இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ