பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், இன்று முதற்கட்ட வாக்குபதிவு துவங்கியது.
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன.
நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தல் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த தேர்தலில் முதற்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கான வாக்குபதிவு காலை 8 மணி முதல் துவங்கியது, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.
இத்தேர்தல், அமைதியான முறையில் நடந்து முடிந்தது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் செய்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
#Visuals from Rajkot: EVMs & VVPATs being sealed after first phase of polling ends in #GujaratElection2017 pic.twitter.com/3MBIGuVL42
— ANI (@ANI) December 9, 2017
Gujarat: First phase of polling ends in the state, visuals from Bhavnagar #GujaratElection2017 pic.twitter.com/KzfWp6VTVJ
— ANI (@ANI) December 9, 2017