அன்லாக் 5.0-ல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் (Ministry of Education) சனிக்கிழமை (அக்டோபர் 3) வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 15 க்குப் பிறகு கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே திறக்கப்படலாம் என்று கூறியது. ஆனால் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்த இறுதி முடிவை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எடுத்துக்கொள்ளலாம் என கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
பள்ளிகள் / பயிற்சி மையங்கள்
சனிக்கிழமையன்று மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களில், மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், எனினும், அவர்கள் வருவதற்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும் என்றும் குறிபிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று மாணவர்கள் முடிவு செய்தால், பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் கற்றலை (Online Learning) ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
ALSO READ: தமிழகத்தில் October 5 முதல் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்
மத்திய அரசின் அன்லாக் 5 வழிகாட்டுதல்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் SOP களைத் தயாரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, கல்லூரிகள் / உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை, சோதனைக்கூடம் மற்றும் ஆய்வக வேலை தேவைப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஸ்ட்ரீம்களில் பி.எச்.டி மற்றும் பி.ஜி மாணவர்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட முடியும்.
அக்டோபர் 15 ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) முன்னர் ஒரு ஆணையை பிறப்பித்தது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் 5.0 (Unlock 5.0) வழிகாட்டுதல்களில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், அக்டோபர் 15-க்குப் பிறகு, கட்டம் கட்டமாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR