ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு; காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஜம்முவில் பேருந்து நிலையத்தில் இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 18 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இடம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
MK Sinha, IGP Jammu on blast at bus stand: It was a grenade explosion, it has caused injuries to approximately 18 people, all shifted to hospital pic.twitter.com/TYBvQ9lpKj
— ANI (@ANI) March 7, 2019
இதற்க்கு முன்னதாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது.
இந்நிலையில், ஜம்மு -காஷ்மீரில், இந்தியா -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
J&K: Blast at Jammu bus stand. Injured admitted to hospital. Area has been cordoned off by security personnel pic.twitter.com/utO7RX0GOp
— ANI (@ANI) March 7, 2019