சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ‘Icon of Golden Jubilee’ சிறப்பு விருது அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு..!

Last Updated : Nov 2, 2019, 12:39 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ‘Icon of Golden Jubilee’ சிறப்பு விருது அறிவிப்பு! title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு..!

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்படவிழா வரும் நவ 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமாவில் முக்கிய பங்காற்றியமைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; 
கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும் என்றும், விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் விருதை ஏற்று கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை இசபெல் ஹூபர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த மதிப்புமிக்க கவுர விருதினை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி கூறுவதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

 

Trending News