12:00 PM | 1/Jan/2019
புதிதாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜன் தன் யோஜனா எனப்படும் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் 34 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வங்கி முறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள வங்கிக் கணக்குகளில் 55% 2014-2017 காலகட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது என சர்வதேச நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டை சாலைகள் மூலம் இணைக்கும் வாஜ்பாயின் கனவை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
ஒரு கோடியே 30 லட்சம் ஏழை மக்களுக்கு மத்திய அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் மத்திய அரசின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாட்டில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை வேரறுக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சைக்கான கட்டணம் தற்போதைய அரசில் மிகவும் குறைந்துள்ளது. நாட்டின் நான்கு பகுதிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
2022-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு என்கிற திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் மிகவும் குறைவான அளிலேயே தற்போது உள்ளன. முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.
இந்தியாவில் 30 கோடி மக்கள் தற்போது காப்பீடு திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ரெரா கொள்கை மூலம் ஏழைகளும் வீடு வாங்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இளைஞர்களை மேம்படுத்த ஸ்டாட் அப் மற்றும் ஸ்டான்ட் அப் திட்டங்கள் தொழில்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உயர் கல்வி நிலையங்கள் திறப்பதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. 7 ஐ.ஐ.டிக்கள் மற்றும் 7 ஐ.ஐ.எம்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்கள் வெல்ல உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசுத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கு விரைவாக சேவைகள் வழங்கப்படுகின்றன.
முத்ரா கடன் திட்டம் மூலமாக நாடு முழுவதும் பெண்கள் சுய தொழில் தொடங்குவது எளிதாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் பாலினச் சமத்துவத்தை பேண வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. பெண்களுக்கான பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்காக குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. விவசாயிகளுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமங்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. கடந்த காலத்தை ஒப்பிடுகையில் விவசாய வருமானம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
இ-கவர்னன்ஸ் திட்டம் இந்தியாவின் தொலை தூர கிராமங்களையும் சென்றடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
11:30 PM | 31 - Jan - 2019
ஏழைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் இடையூறு இன்றி மக்களை சென்றடைகின்றன. ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம். அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வசதி செய்யப்படும்.
நான்கரை ஆண்டுகளில் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
1:13 PM - 31 - Jan - 2019
அம்பேத்கர், காந்தியின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை....
President Ram Nath Kovind: Healthcare is my government’s topmost priority. I am happy to inform you that the benefits of government’s schemes are reaching poorest of the poor. pic.twitter.com/N6LvFsNlq4
— ANI (@ANI) January 31, 2019
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்...
நாடாளுமன்றம் இன்று தொடங்கி வருகிற 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைநிகழ்த்துவார். நாடாளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அருண் ஜேட்லீ சிகிச்சை பெற்று வருவதால், நிதியமைச்சராக தற்காலிகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் முதல்முறையாக மோடி அரசின் இறுதி இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். மத்திய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவதாகவும், சட்டரீதியாக இடமில்லை என்றும் காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, நாளை இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியான போதும், தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் வரிமாற்றம் இருக்காது என்பதே கடந்த காலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆயினும் அரசின் கொள்கை ரீதியான முடிவெடுக்க வாய்ப்புள்ளதால், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Delhi: #Visuals of all-party meeting ahead of #BudgetSession of the Parliament pic.twitter.com/MGCnl8wcNy
— ANI (@ANI) January 31, 2019
மேலும், தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை காரணமாக வைத்து கூட்டத்தொடரை முடக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ரபேல் ஒப்பந்தம் தொடர்பான CAG அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையில் ரபேல் விமானம் வாங்குவதற்கு சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பான விபரங்கள் மட்டுமே இருக்கும் எனவும், விமானத்தின் விலை குறித்த தகவல்கள் ரகசியம் கருதி இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.