PMC வங்கி மோசடிக்கு அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை: நிர்மலா சீதாராமன்!!

பிஎம்சி வங்கி மோசடிக்கு அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

Last Updated : Oct 10, 2019, 03:28 PM IST
PMC வங்கி மோசடிக்கு அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை: நிர்மலா சீதாராமன்!! title=

பிஎம்சி வங்கி மோசடிக்கு அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெற்ற சுமார் 6,500 கோடி ரூபாய் கடனை எச்.டி.ஐ.எல். நிறுவனம் மோசடி செய்து விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்நிறுவனத்தின் தலைவரையும், அவரது மகனையும் கைது செய்தனர். இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பி.எம்.சி. வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.களில் பணம் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடு தான் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபம் அடைந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர், மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு சென்ற நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், இந்த விவகாரத்தில் நேரடியாக தங்களால் எதுவும் செய்ய முடியாது தெரிவித்துள்ளார். 

மேலும், பி.எம்.சி. வங்கியை கட்டுப்படுத்துவது ஆர்.பி.ஐ. தான் என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஊரக மற்றும் நகப்புற மேம்பாட்டு அமைச்சகங்களுடன் பேசி விவரங்களை சேகரிக்க தனது அமைச்சக செயலர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

 பி.எம்.சி வங்கி ஊழலில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று FM உறுதியளித்துள்ளார். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டாளராக இருப்பதால் நிதி அமைச்சகத்திற்கு (பிஎம்சி வங்கி விஷயம்) நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய எனது அமைச்சின் செயலாளர்களை ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.  

 

Trending News