சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதிக்கு அருகில் சரக்கு வண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பெட்டிகள் சேதமாகியுள்ளது!
கிரண்டுல்-விஷாகப்பட்டினம் வழித்தடத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 8 பெட்டிகள் சேதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. விபத்திற்கான காரணமும் தெரியவில்லை.
Dantewada: Eight coaches and engine of a goods train derailed & fell from a bridge between Bhansi & Kamalur area. Naxals involvement suspected. More details awaited. #Chhattisgarh pic.twitter.com/shHTsvQGMn
— ANI (@ANI) June 24, 2018
இதுகுறித்து தண்டேவாடா பகுதி காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், விபத்து நடைப்பெற்ற இடமானது பானசி மற்றும் கம்மலூர் பகுதிக்கு இடைப்பட்ட பகுதி. இப்பகுதியில் நச்சலைட்டுகள் நடமாட்டம் காணப்படும் பகுதியாகும். எனவே இந்த விபத்தானது அவர்களின் சதி செயலால் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
விபத்திற்குள்ளான சரக்கு வண்டியானது இரும்பு பொருட்களை பச்சேலியில் இருந்து விஷாகப்பட்டினத்திற்கு கொண்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடிற்காலை 1 மணியளவில் கம்மலூர் காட்டுப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. இப்பகுதியா9னது ராய்பூரில் இருந்த 450கிமி தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விபத்தினை குறித்த தகவல் அறிந்ததும் தண்டேவாடா காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்ததாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!