யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டம்: மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கவுள்ளது. ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த முன்மொழிவு (யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டம்) பிரதமருக்கு பொருளாதார ஆலோசனைக் குழுவால் அனுப்பப்பட்டுள்ளது. இதில், நாட்டில் பணிபுரிவதற்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து பேசப்பட்டுள்ளது. இதனுடன், நாட்டில் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன், உலகளாவிய ஓய்வூதிய முறையையும் தொடங்க வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு கூறியுள்ளது.
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு
- குழுவின் அறிக்கையின்படி, இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
- நாட்டில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு சிறந்த ஏற்பாடுகளை பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் படிக்க | Live Update: 2022 ஜூன் 15 இன்றைய முக்கிய செய்திகள்
திறன் மேம்பாடு அவசியம்
பணிபுரியும் வயதில் உள்ளவர்களின் மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டுமானால், ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு அமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்க இது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்தும் இந்த அறிக்கையில் பேசப்பட்டுள்ளது.
அரசாங்கங்கள் கொள்கைகளை உருவாக்குகின்றன
திறன் மேம்பாடு ஏற்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் என பயிற்சி பெறுவதற்கு வசதியில்லாதவர்களும் சேர்க்கப்பட வேண்டும். எனினும் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
உலக மக்கள்தொகை ப்ராஸ்பெக்டஸ் 2019-ன் அறிக்கை
2019 ஆம் ஆண்டின் உலக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 32 கோடி மூத்த குடிமக்கள் இருப்பார்கள். அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 19.5 சதவீதம் பேர் ஓய்வு பெற்றவர்கள் என்ற பிரிவிற்குள் செல்வார்கள். 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம், அதாவது 14 கோடி மக்கள் மூத்த குடிமக்கள் பிரிவில் உள்ளனர்.
மேலும் படிக்க | ஜூலை 1 முதல் ரயில்வே வெளியிட்டுள்ள புதிய முன்பதிவு விதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR