கோவா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தன் களியாட்டத்தை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2020, 02:08 PM IST
  • கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • தன்னுடைய கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதாக அவர் புதன்கிழமை தெரிவித்தார்.
  • வீட்டிலிருந்து பணிபுரிந்துகொண்டே எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன்-சாவந்த்
கோவா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!! title=

பனாஜி: உலகெங்கிலும் கொரோனா வைரஸ் (Corona Virus) தன் களியாட்டத்தை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் உள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதாக அவர் புதன்கிழமை தெரிவித்தார்.

தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் (Home isolation) உள்ளதாகவும் சாவந்த் கூறினார்.

"நான் கோவிட் -19-க்கு நேர்மறையாக கண்டறியப்பட்டுள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே வீட்டு தனிமைப்படுத்தலைத் தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று சாவந்த் மைக்ரோ வலைப்பதிவு தளமான ட்விட்டரில் எழுதினார்.

"வீட்டிலிருந்து பணிபுரிந்துகொண்டே எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: ஆசியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள நாடு இந்தியா..!

கோவாவில் (Goa) இதுவரை மொத்தம் 18,006 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சமீபத்திய தகவல்களின் படி இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் COVID-19 தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். இதில் 29 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66,333 பேர் இறந்துள்ளனர்.  

ALSO READ: COVID-19 தடுப்பூசியை உருவாக்கவும், விநியோகிக்கவும் WHO உடன் சேர மாட்டேன்: US

Trending News