Freebies: இலவசங்களை வாரி வழங்கும் மத்திய அரசு! இலவச ரேஷன்! இலவசமாய் டிவி பார்க்கலாம்

Freebies For TV Watching: இலவசமாக ரேஷன் வழங்கும் மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, இலவசமாக தொலைகாட்சி பார்க்கும் வசதியை அளிக்கிறது மத்திய அரசு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 5, 2023, 07:12 AM IST
  • டிவி பார்க்க கட்டணம் செலுத்த தேவையில்லை
  • இலவச ரேஷன் திட்டத்தைத் தொடரும் இலவச டிவி பார்க்கும் வசதி
  • தூர்தார்ஷன், ஆல் இண்டிய ரேடியோவை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
Freebies: இலவசங்களை வாரி வழங்கும் மத்திய அரசு! இலவச ரேஷன்! இலவசமாய் டிவி பார்க்கலாம் title=

நியூடெல்லி: பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இனிமேல் நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்கள் டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன், அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது. இலவசமாக ரேஷன் வழங்கும் மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, இலவசமாக தொலைகாட்சி பார்க்கும் வசதியை அளிக்கும் மத்திய அரசு இதற்கான செலவை ஏற்கிறது.

இலவச உணவு தானியங்கள் வழங்குவதுடன், தற்போது டிஷ் டிவியையும் இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது.

ரூ.2,539 கோடி செலவு
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் நிலையை மேம்படுத்த ரூ.2,539 கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாருக்கு இலவச டிஷ் கிடைக்கும்?
நாட்டின் தொலைதூர, எல்லை மற்றும் பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக டிஷ் வசதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 7 லட்சம் மக்களுக்காக இலவச டிஷ்கள் நிறுவப்படும். இத்திட்டத்தின் மூலம் டிடிஎச் சேவையை விரிவுபடுத்துவதே மத்திய அரசின் திட்டம்.

இதனுடன், தூர்தர்ஷன் மற்றும் ஆல் இண்டிய ரேடியோவில் உள்ள பழைய ஸ்டுடியோ உபகரணங்கள் மற்றும் OB வேனை முழுமையாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: உறுதியானது டிஏ ஹைக், ஊதிய உயர்வின் முழு கணக்கீடு இதோ

36 சேனல்கள் தூர்தர்ஷனின் கீழ் வருகின்றன
தற்போது சுமார் 36 தொலைக்காட்சி சேனல்கள் தூர்தர்ஷனின் கீழ் வருகின்றன. அதே நேரத்தில், இவற்றில் 28 பிராந்திய சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. AIR தற்போது சுமார் 500 ஒளிபரப்பு மையங்களைக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் செய்திக்குறிப்பு 
அரசின் இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் வேலை வாய்ப்பும் பெருகும் என்று அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதனுடன், உள்ளடக்கத்தின் தரமும் மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், இதன் காரணமாக இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது.

வீடியோ தரம் மேம்படும்
தூர்தர்ஷனில் பெரிய மாற்றங்களுடன், வீடியோ தரத்தையும் அரசாங்கம் மேம்படுத்தும். இதனுடன், பழைய டிரான்ஸ்மிட்டர்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை நிறுவுவதாகவும், பழைய டிரான்ஸ்மிட்டர்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News