பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினத்தில், டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2022, 10:08 AM IST
  • பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினம் இன்று.
  • பல தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  • அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக வாஜ்பாய் இருந்தார்.
பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி title=

 

பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினம் இன்று. முன்னாள் பிரதமரான வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் மரணமடைந்தார்.   நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 

அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினத்தில், டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஜேபி நட்டா உள்பட பல தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இதயப்பூர்வமான நினைவு அஞ்சலி என்று வாஜ்பாயின் நினைவுநாளில் பாஜகவின் அதிகாரபூர்வ கணக்கில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் - அமித் ஷா புகழாரம்

அடல் பிஹாரி வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார். பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு இந்தி கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் மிகச்சிறந்த பேச்சாளர். ஜனசங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக வாஜ்பாய் இருந்தார்.

அடல் பிஹாரி  வாஜ்பாய்க்கு கிடைத்த விருதுகள்

1. வாஜ்பாய் 1992 ம் ஆண்டில் பத்ம விபூஷன் பெற்றார்

2. 1993ம் ஆண்டில் கான்பூர் பல்கலைக்கழகத்தில் டி லிட் பட்டம் பெற்றார்

3. 1994ம் ஆண்டில் வாஜ்பாய்க்கு லோகமான்ய திலக் விருது

4. 1994ம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது மற்றும் பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது வழங்கப்பட்டது

5. 2015ம் ஆண்டில் மத்தியப் பிரதேச போஜ் திறந்த பல்கலைக்கழக ஜியா லால் பைர்வாவில் (தியோலி) டி லிட் பட்டம்

6. பங்களாதேஷ் அரசாங்கத்தின் 'Friends of Bangladesh Liberation War Award'

7. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா இந்திய அரசால் வழங்கப்பட்டது

மேலும் படிக்க | சுதந்திர தினம் 2022: தியாகம், வீரம் கொண்ட வீரர்கள் தந்த வரம் நம் சுதந்திரம், இதை கண் போல் காப்போம்!!
https://zeenews.india.com/tamil/india/independence-day-2022-know-the-sig...

மேலும் படிக்க | Amrit Mahotsav: இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய 5 இடங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News