முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்...
Delhi: Former Cricketer Gautam Gambhir joins Bharatiya Janata Party(BJP) in the presence of Union Ministers Arun Jaitley and Ravi Shankar Prasad pic.twitter.com/EYmhfSSMy7
— ANI (@ANI) March 22, 2019
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்!!
டெல்லியில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் BJP-யில் இணையுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான உத்தியை கையாண்டு, அதை செயல்படுத்தியும் வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை 7 தொகுதிகளையும் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நடக்கவுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில், பிரபலங்களை நிறுத்தினால் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசை சமாளிக்க முடியும் என ஒரு உத்தியை திட்டமிட்டுள்ளது.
இதனால் புது டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை களம் இறக்க பாஜக முயற்சித்து வருகிறது. கவுதம் காம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். அதன் பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிந்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமித்சரசில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருன்ஜெட்லிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட காம்பீர் ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
Former Cricketer Gautam Gambhir likely to join Bharatiya Janata Party(BJP) today pic.twitter.com/Xse25c6lvl
— ANI (@ANI) March 22, 2019
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட காம்பீர் ஆம் ஆத்மியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மிக மோசமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளிலும், வர்ணனையும் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.