கொரோனா (Corona) நெருக்கடி காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுன் (Lockdown) காரணமாக தடம் புரண்ட பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வர மோடி அரசு வியாழக்கிழமை மற்றொரு பொருளாதார நிவாரண திட்டத்தை அறிவித்தது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்பதை காட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் தற்சார்பு இந்தியா 3.0 திட்டத்தை அறிவித்தார். நாட்டில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், தற்சார்பு இந்தியா தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக தன்னம்பிக்கை இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் EPFOவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் பயனடைவார்கள். EPFOவில் பதிவுசெய்யப்படாத நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்ச் 1 முதல் செப்டம்பர் 30 வரை வேலை இழந்தவர்களும் இந்த திட்டத்தின் பலனை பெறுவார்கள். இத்திட்டம் 2020 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு 2021 ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.
பி.எஃப்-ல் (PF) பதிவு செய்யப்படாத, 15 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் பெற்ற ஊழியர்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்கும். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை வேலை இல்லாதவர்கள், ஆனால் பின்னர் பி.எஃப் இல் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தின் பலனையும் பெறுவார்கள். இந்த திட்டம் 30 ஜூன் 2021 வரை நடைமுறையில் இருக்கும்.
மோடி அரசு (Modi Government) அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) காலத்தை நீட்டித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் பயன் 31 மார்ச் 2021 வரை கிடைக்கும். தற்சார்பு இந்தியா திட்டத்தில், ஈ.சி.எல்.ஜிஎஸ் திட்டத்தின் கீழ் 6 கோடியே 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
ALSO READ | சுவாமி விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி, JNU வளாகத்தில் இன்று திறந்து வைக்கிறார்
சமீபத்திய புள்ளிவிவரங்கள் பொருளாதாரத்தில் (Economy) முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன என்று நிதியமைச்சர் கூறினார். ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது என்றும், மூன்றாம் காலாண்டில் பொருளாதாரம் மேலும் வளர்ஃப்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ரயில்வேயில் (Railway) சரக்கு போக்குவரத்து 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் கூறினார். வங்கி கடன் வழங்கல் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொருளாதாரம் மேலும் மேம்படும். FPI இன் நிகர முதலீடும் சாதகமாக உள்ளது. ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி இருப்பு 560 பில்லியன் டாலர் என்ற சாதனையை எட்டியுள்ளது.
செய்தியாளர் கூட்டத்தில், பேசிய நிதியமைச்சர் தற்சார்பு இந்தியாவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன என்று கூறினார். இதேபோல், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளும் நல்ல பலனைத் தந்தன என்றார். 157.44 லட்சம் விவசாயிகளுக்கு வங்கிகள் கிசான் கடன் அட்டைகளை வழங்கியுள்ளன. அவருக்கு இரண்டு கட்டங்களாக ரூ .1,43,262 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதலீடு அதிகரித்து வருவதாக சீதாராமன் கூறினார். அவசர கடன் வழங்கும் திட்டத்தின் (ஈசிஜிஎல்எஸ்) கீழ் 61 லட்சம் பேருக்கு 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் வருமான வரித்துறை 1.32 லட்சம் கோடி ரூபாய் வரியை ரீபண்ட் செய்துள்ளது என்றார்.
ALSO READ | Corona-வுடனான போரில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு நன்றி: WHO தலைவர் பாராட்டு!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR