5 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு!!

மக்களவை தேர்தலுக்கான 5 வது கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!!

Last Updated : May 4, 2019, 11:04 AM IST
5 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு!! title=

மக்களவை தேர்தலுக்கான 5 வது கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!!

இந்தியா முழுவதுமான மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரட்சரங்கள் நாடுமுழுவதும் சூடுபிடித்து வருகின்றநிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும்  7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவை தொகுதியிலும், ராஜஸ்தானில் 12 தொகுதிகளிலும், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7 தொகுதிகளிலும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று, பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 மற்றும் ஜம்மு, காஷ்மீரில் 2 தொகுதிகளிலும் மே 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இன்று மாலையுடன் பிரசாரம் முடிய உள்ள நிலையில், இறுதிக் கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ராகுல், ஸ்மிருதி இரானி போட்டியிடும் அமேதி, சோனியா போட்டியிடும் ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளும் ஐந்தாம் கட்டத் தேர்தலில் அடங்கும்.

 

Trending News