மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மும்பை நகரத்திற்க்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை வழக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்றும் கனமழை தொடரும் என்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களாக மும்பையில் கனமழை கொட்டி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
மும்பையில் கனமழையால் செவ்வாய்க்கிழமை வீடு இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் தானேவில் 2 பெண்களும் மழைக்கு உயிரிழந்துவிட்டனர். இருவர் காயமடைந்தனர்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. அது இன்று மதியம் குஜராத்தை நோக்கி சென்று அரபிக் கடலை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போகும்போது மிகவும் கனமழையுடன் ஒரு பிரளயத்தையே உண்டுசெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று்ம பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை பல்கலைக்கழகத்துக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மும்பையில் கனமழை பெய்து நிலையில் ரெட் அலெர்ட் வழக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும் கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.