Video: பிஹார் மருத்துவமனையில் குடிபுகுந்த ஆற்று மீன்கள்!

பிஹாரில் பொழிந்து வரும் கடும் மழை காரணமாக பாட்னாவின் நாலாந்தா மருத்துவ கல்லூரியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது!

Last Updated : Jul 29, 2018, 05:09 PM IST
Video: பிஹார் மருத்துவமனையில் குடிபுகுந்த ஆற்று மீன்கள்! title=

பாட்னா: பிஹாரில் பொழிந்து வரும் கடும் மழை காரணமாக பாட்னாவின் நாலாந்தா மருத்துவ கல்லூரியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது!

பிஹாரில் பெரும் மழை பொழிந்து வருவதன் காரணமாக, சாலைகளை தாண்டி குடியிறுப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்து வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதன் உச்சக்கட்டமாய் பாட்னாவில் உள்ள நாலாந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரையிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மழைநீரில் மீன்கள் வந்து குடியிருக்கும் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் மீட்பு பணியினை கவனிக்கக முடக்கிவிடப் பட்டிருப்பதாகவும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இறத்கிடையில் பீஹார் வானிலை ஆய்வு மையமானது, மாநிலத்தில் மழையின் அளவு தொடந்து நீடித்து வரும் என குறிப்பிட்டுள்ளது. அதன்படி பிஹார், ஜார்கண்ட் மற்றும் உத்திரபிரதேச பகுதிகளில் மிதமான மழை தொடரும் எனவும், அஸாம், மேகாலையார உத்ராகாண்ட், மத்திய பிரதேஷ், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சிக்கிங்ர அருச்சாணால் பிரதேஷ், நாகாலாந்த், மனிப்பூர், மிச்ரோம் மற்றும் திரிபுரா பகுதிகளில் அதிகமான மழை பொழியும் எனவும் தெரிவித்துள்ளது.

Trending News