இன்னும் மூன்றே மாதங்களே மக்களவை தேர்தலுக்கு உள்ளது. இதனால் இந்த ஆண்டு இடைக்காலப் பட்ஜெட் மட்டும் தான் தாக்கல் செய்யமுடியும். இதனால் பட்ஜெட் மீதனா எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. தற்போது உள்ள மோடி அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். எனவே மோடி அரசின் கடைசி பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் இருக்காது. அதையும் மீறி மக்கள் கவர பல நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்வார்.