ஜவுளி மீதான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களின் எதிர்ப்பை அடுத்து, ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி  5% முதல்12% உயர்த்தும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 31, 2021, 06:30 PM IST
ஜவுளி மீதான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் title=

புது டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர், ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஜவுளி மற்றும் குறைந்த விலை காலணிகளுக்கான வரி விகிதங்களை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக திருத்த ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. காலணி மற்றும் ஜவுளித் துறைகளின் (Textile Sector) கட்டமைப்பை சரிசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த புதிய வரி கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரவிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து இன்று விவாதிக்கப்படவில்லை. ஜவுளிகள் மீதான வரிக் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. எனவே 5% இலிருந்து 12% வரி உயவுக்கு செல்லாமல், தற்போதைய நிலையைத் தொடரும் என்றும், ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப் படவில்லை என்றும்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

இருப்பினும், ரூ. 1000க்கு அதிகமான காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்திவைப்பு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே நாளை (சனிக்கிழமை) முதல், 1,000 ரூபாய் வரையிலான காலணிகளுக்கான வரி விகிதம் 5% லிருந்து 12% ஆக உயரும் எனவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

ALSO READ |  ஜனவரி 1 முதல் ஆன்லைனில் உணவு டெலிவரி சேவைக்கு 5% GST

ஜிஎஸ்டி (Goods and Services Tax rate) வரி காரணமாக ஜவுளி விலை உயர்வை குறித்து ஆய்வு செய்ய மாநில நிதியமைச்சர்கள் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி மாதத்திற்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முதன்மை தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, ஜவுளித் துறையில் வரி விகிதங்களை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை "மிகவும் ஆபத்தானது" என்று விவரித்திருந்தார். இந்த நடவடிக்கையால் சுமார் ஒரு லட்சம் டெக்ஸ்டைல் ​​யூனிட்கள் மூடப்படும் என்றும், ஜவுளி மற்றும் அதன் துணைத் துறைகளில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

ALSO READ |  அதிர்ச்சி! ஜிஎஸ்டி வரி உயர்வு ஜனவரி 1 முதல் உங்கள் பாக்கெட்டை எவ்வாறு பாதிக்கும்!

குஜராத், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரியை உயர்த்தினால், இந்த விலை உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதேபோல இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டத்தில், 3,000 அல்லது 5,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் ஆயத்த ஆடைகளுக்கு 12% அதிக வரி விதிக்கலாம் என்றும், அதற்குக் குறைவான ஜவுளிகளுக்கு தற்போது விதிக்கப்படும் 5% வரியை தொடர அனுமதிக்கலாம் என்றும் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து "இயல்புநிலைக்குத் திரும்பும்" நேரத்தில் வரி உயர்வு ஜவுளி தொழில்துறையை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ALSO READ |  GST on Auto Fare: ஜனவரி 1ம் தேதி Ola-Uber கட்டணங்கள் உயருகின்றன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News