வாகனங்களைக் கண்காணிக்க FASTags ஆதாராக செயல்படும்: நிதின் கட்காரி!

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தொடும் என சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Oct 15, 2019, 12:26 PM IST
வாகனங்களைக் கண்காணிக்க FASTags ஆதாராக செயல்படும்: நிதின் கட்காரி! title=

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தொடும் என சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!!

திங்கட்கிழமை (நேற்று) மின்னணு மூலம் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, நடப்பு 2019 - 2020 ஆம் நிதியாண்டில் இந்த சுங்க கட்டணம் வசூலானது 30,000 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 30,000 கோடி ரூபாயாவது இருக்கும் என்றும், நாங்கள் நிறைய புதிய ரோடுகளை இன்னும் 5 ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளோம், இதனால் அடுத்த ஐந்து வருடத்தில் சுங்க கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார். 

தற்போது 1.4 லட்சம் கிலோமீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் உள்ளது என்றும், இதில் 24,996 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகளில் தற்போது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன என்றும், இதன் மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த ஆண்டு இறுதியில் இது 27,000 கிலோ மீட்டாராக அதிகரிக்கும் என்றும், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 75,000 கிலோ மீட்டாராக அதிகரிக்கும் என்றும் கட்கரி தெரிவித்தார். 

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிடும் என்றும், இதன் மூலம் சுங்க சாவடி கட்டண முறைகளில் உள்ள சிக்கல்கள் முழுமையாக நீங்கி விடும் என்றும் அவர் தெரிவித்தார். முழுமையான மின்னணு முறையால், அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி மூலம் கிடைக்கும் கட்டண வருவாய் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் மேலும் பல தரமான சாலைகளை அமைக்க முடியும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 

Trending News