ஒரு வருடம் முன்பு, பிப்ரவரி 24, 2019 அன்று, முதல் தவணையை நேரடியாக கோரக்பூர் உழவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி பிரதமர் பிரதமர் கிசான் திட்டத்தைத் தொடங்கினார்.
உழவர் வருமானத்தை அதிகரிக்கவும், பொருளாதார ரீதியாக அவற்றை வலுப்படுத்தவும் மத்திய அரசு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இtதில், விவசாயிகளுக்கான பல நிவாரண திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. PM-KISAN திட்டத்தின் கீழ் அனைத்து விவசாய பயனாளர்களுக்கும் கிசான் கடன் அட்டை (Kisan Credit Cards) விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தின் சித்திரகூட் பகுதியில் துவங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியக இந்தியா முழுவதும் சுமார் 25 லட்சம் PM-KISAN பயனாளிகளுக்கு கிஸான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள வங்கி கிளைகளுக்கு இந்த கிஸான் அட்டைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.
கிஸான் கடன் அட்டை பயன்தாரர் சரியான நேரத்தில் தனது கடனுக்கான மாத தவனையை செலுத்தினால், இந்த அட்டையின் கடன் வரம்பு ரூபாய் 3 லட்சம் வரை அதிகரிக்கப்படும். அரசுடமையாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் படி, விவசாயிகள் சரியான நேரத்தில் காலம் தாழ்த்தாது கடனை திரும்ப செலுத்தி விட்டால் அவர்களது கடனுக்கான வட்டி விகிதம் 3 சதவிகிதம் என தள்ளுபடி செய்யப்படும்.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை. இந்த அட்டை வைத்துள்ள பயனாளர்களிடமிருந்து வங்கிகள் கடனுக்காக குறைந்த வட்டியே வசூலிக்கும்.
கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு கூடுதல் வட்டியும் வழங்கப்படும். குறைந்த வட்டியில் கடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல் கடன் அட்டையின் மூலம் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிற்களுக்கும் பயிற் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்படும்.