புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்று வருகிறது. சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் நுழைந்த விவசாயிகள், சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்தனர்.
அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை (Farmers) கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதனால் விவசாயிகள் போராட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH A protestor hoists a flag from the ramparts of the Red Fort in Delhi#FarmLaws #RepublicDay pic.twitter.com/Mn6oeGLrxJ
— ANI (@ANI) January 26, 2021
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை (Farm Laws) ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். சுமார் 2 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
Also Read | குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா?
டெல்லிக்குள் டிராக்டரில் வந்த விவசாயிகள் அனுமதிக்கப்படாத இடங்களிலும் நுழைந்துவிட்டனர். தற்போது அவர்கள் செங்கோட்டையை (Red Fort) அடைந்தனர். செங்கோட்டை கொத்தளத்தில் ஏறி மூவர்ணக் கொடிகளையும், விவசாய சங்கங்களின் கொடியையும் ஏற்றியுள்ளனர்.
குடியரசு தினமான இன்று, காலை நடைபெற்ற ராணுவ பேரணியின் வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்திவைக்கப்படும். இந்த நிலையில் விவசாயிகள் இங்கு நுழைந்திருப்பது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 72வது குடியரசு தினவிழாவன்று நடைபெறும் இன்று இப்படி ஒரு போராட்டமும், செங்கோட்டை முற்றுகையும், இந்தியா மீதான கவனத்தை குவிக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படும் செங்கோட்டை கொத்தளத்தில் விவசாயிகள் கட்டுப்பாட்டை மீறி நுழைந்திருப்பது மிகப் பெரிய அத்துமீறல் ஆகும்.
62 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் தற்போது வேறொரு கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. இனி, அரசும் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்ற சூழ்நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிவிட்டது.
Also Read | Army பணிக்கு ஆட்சேர்ப்பு தொடங்குகிறது, விவரங்கள் வேண்டுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR