லோக்பால் தலைவராக P C கோஷ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!!

நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!!

Last Updated : Mar 17, 2019, 07:29 PM IST
லோக்பால் தலைவராக P C கோஷ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!! title=

நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!!

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் விசாரிக்கும் அமைப்பாக மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்கும்படி 2017 ஆம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய மாநில அரசுகள் இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் இழுபறி செய்து வருகின்றன.  பல்வேறு மாநிலங்கள் லோக் ஆயுக்தா மசோதாவை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளன. 

இந்நிலையில், லோக்பால் அமைப்பை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை பரிசீலித்த நீதிமன்றம், லோக்பால் நீதிபதியை தேர்வு செய்யும் தேர்வுக்குழு, உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு எங்களுக்கு முழுமையாக மனநிறைவை அளிக்கவில்லை என்பதால், இது குறித்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து, நாட்டின் முதல் லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சி.கோஷ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட "பொது சேவகர்கள்" மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்தது லோக்பால் அமைப்பு.

இதற்கான சட்டம் 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுவிட்ட போதிலும், இதுவரை லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. லோக்பால் அமைப்பை விரைந்து ஏற்படுத்தக்கோரி வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதற்கு காலக்கெடு விதித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு ஓரிரு நாட்களுக்கு முன்னர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷின் பெயரை இறுதி செய்து பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால் உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 4 பேரும், குடிமையியல் துறைகளில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் 4 பேரும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பினாகி சந்திர கோஷ், ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News