புது தில்லி: Essel குழுமத் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான டாக்டர் சுபாஷ் சந்திரா, பாஜக சார்பில் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளராக ராஜஸ்தானில் இருந்து போட்டியிட, செவ்வாய்க்கிழமை (மே 31) வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், டாக்டர் சுபாஷ் சந்திரா ஜெய்ப்பூரில் உள்ள மோதிதுங்கரியில் உள்ள விநாயகப் பெருமானின் கோயிலுக்கும் செல்கிறார்.
ராஜஸ்தானில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த டாக்டர் சுபாஷ் சந்திரா, அந்த மாநிலத்தின் 2வது பாஜக வேட்பாளர் ஆவார். முன்னதாக, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் கன்ஷியாம் திவாரியை கட்சி நிறுத்தியுள்ளது.
மாநிலங்களை தேர்தலில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இந்த இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறு இந்த தேர்தல் நடைபெறும்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட முக்கியப் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்கள் அவைக்கு அடுத்த மாதம் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக இதுவரை வெளியிட்ட மூன்று பட்டியல்களில் 22 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம், மே 24, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 31, 2022 ஆகும்.
வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 3, 2022 ஆகும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 10 அன்று நடைபெறும்.
மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR