பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.
இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றுவர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த முதலாக் முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் காவல் துறையினரை முடியாமல், தண்டனைக்கான விதிகள் இல்லாததால் தவறு செய்யும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இப்பிரச்சனையை, தீர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை இயற்றும் என்ற தகவல் வெளியாகி வந்தது.
இதையடுத்து, முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.
இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரித்தது.
ஆனால், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் (விவாகரத்து பெறும் பெண்) தனக்கும், தனது மைனர் குழந்தைக்கும் ஜீவனாம்சம் தொகை பெற மாஜிஸ்திரேட்டை அணுகவும், மைனர் குழந்தையை தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள மாஜிஸ்திரேட்டை நாடவும் இந்த மசோதா வகை செய்கிறது.
மசோதாவை தாக்கல் செய்து மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில் கூறியது; வரலாற்றில் இன்றைய தினம் முக்கியமான நாள். முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுபற்றி இந்த சபை முடிவு செய்ய இருக்கிறது.
நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும் முழு அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு உள்ளது. முத்தலாக் சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும், முத்தலாக் நடைமுறை நீடித்தால் அதை பார்த்துக் கொண்டு பாராளுமன்றம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?.
இந்த மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், அவர்களுடைய கண்ணியத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அதிக தடங்கலுக்கு பின்னர் இந்த முத்தாக் பிரச்சனைக்கு நேற்று முடிவுகட்டப்பட்டது, சபையில் மசோதா நிறைவேறியது.
Moradabad: Woman named Varishaa says, 'my husband gave me #TripleTalaq over dowry, he told me either get a car or Rs.10 lakh cash, if you can't I will leave you.' pic.twitter.com/zKABVylADq
— ANI UP (@ANINewsUP) December 29, 2017