முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான நவ்ஜோத் சிங் சித்து பீகாரில் நடந்த பேரணி ஒன்றில் பேசுகையில்., சிறுபான்மை சமூக மக்களான முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Election Commission of India has issued a notice to Punjab Minister Navjot Singh Sidhu seeking an explanation within 24 hours for his remarks 'urging Muslims to not split votes,' made during a rally on 16 April in Katihar, Bihar. (File pic) pic.twitter.com/n2CT5VR3VO
— ANI (@ANI) April 20, 2019
இதன் காரனமாக அவருக்கு எதிராக சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதனை சித்து மீறியுள்ளார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர்த்து அரசியல் பிரசாரங்களில் மத விசயங்களை பேசுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து சித்துவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 24 மணிநேரத்தில் சித்து பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பீகாரில் பேசிய சித்து கூட்டத்தில் மோடி இந்தியாவின் பிரதமரா? இல்லை அம்பானி, அதானியின் தொழில் வளர்ச்சி மேலாளரா? என கிண்டல் செய்ததாக தெரிகிறது.
மேலும் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சித்து, "அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும் பாஜக தனியார் தொழில் நிறுவனங்கள் மீதே அதீத அக்கறை செலுத்துகிறது.
நான் தேசத்தின் காவலன் என்று மார்தட்டும் பிரதமர் மோடி, உண்மையில் அந்த பாதுகாவலர் பணக்காரர்களின் வீட்டு வாசலில் அல்லவா காவல் நிற்கிறார். அந்த வீடுகளில் நுழைய ஏழை மக்களுக்கு அனுமதி கிடைக்குமா? என விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி இந்த நாட்டின் பிரதமரா இல்லை அம்பானிக்கும் அதானிக்குமான தொழில் மேம்பாட்டு மேலாளரா என்று தெரியவில்லை எனவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.