மூன்று மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் கமிஷன்!!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. 

Last Updated : Jan 18, 2018, 01:04 PM IST
மூன்று மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் கமிஷன்!! title=

இன்று மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. 

2013-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி பதவியேற்ற மேகாலயா சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2013-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பதவியேற்ற நாகாலாந்து சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2013-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி பதவியேற்ற திரிபுரா மாநில சட்டசபையின் பதவி காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

சுமார் 60 இடங்களைக் கொண்ட மூன்று மாநில சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அதற்கு முன் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. 

இதையடுத்து, தற்போது அந்த மூன்று மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. 

> திரிபுராவில் பிப்ரவரி 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெரும். 

> மேகாலயா மற்றும் நாகாலாந்தில் வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெரும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

 

Trending News