கர்நாடக தேர்தல் தேதி இன்று அறிவிப்பு! சிக்கலாகும் காவிரி மேலாண்மை!

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 

Last Updated : Mar 29, 2018, 01:56 PM IST
கர்நாடக தேர்தல் தேதி இன்று அறிவிப்பு! சிக்கலாகும் காவிரி மேலாண்மை! title=

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் ஆட்சி முடிவடையும் நிலையில் கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளார். 

 

 

கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதலே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என வாய்ப்புள்ளது.

Trending News