ஜன., முதல் பேருந்து கட்டணத்தில் சலுகை- டெல்லி அரசு

காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. 

Last Updated : Dec 21, 2016, 05:07 PM IST
ஜன., முதல் பேருந்து கட்டணத்தில் சலுகை- டெல்லி அரசு title=

புது டெல்லி: காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தனிநபர் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் பேருந்து பயணம் செய்பவர்களுக்கு புதிய சலுகைகளை டெல்லி அரசாங்கம் வழங்கியுள்ளது. அதன்படி பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் இருப்பவர்களுக்கும் பேருந்தில் 75% கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 5-15 ரூபாய் கட்டணமும், குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 10-25 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 21 வயதுக்குட்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளன. பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் 75% சலுகை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத்துறை கூறுகையில் "சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. இதனால் காற்று மாசுபாடு குறையும் என கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

Trending News