வழித்தடத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை!! 3.5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான கட்டணம்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டு விமான (Domestic flights) சேவை மே 25 முதல் தொடங்கப்படுகின்றன. அதாவது வரும் திங்கள் முதல் விமானங்கள் பறக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2020, 04:20 PM IST
வழித்தடத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை!! 3.5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான கட்டணம் title=

புது தில்லி: இரண்டு மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டு விமான (Domestic flights) சேவை மே 25 முதல் தொடங்கப்படுகின்றன. அதாவது வரும் திங்கள் முதல் விமானங்கள் பறக்கும். முன்பு போல இல்லை என்றாலும், சில கட்டுப்பாட்டுகளுடன் உள்நாட்டு விமானங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் எஸ்ஓபி (SOP) ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் உடல் பரிசோதனை சரிபார்ப்பு இருக்காது. ஆரோக்யா சேது பயன்பாடு அவசியம்.

அனைவரின் சம்மதத்துடன், மே 25 முதல் அளவீடு செய்யப்பட்ட முறையில் விமானங்களை இயக்கத் தொடங்குவோம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்தார். கட்டணம் குறித்து ஹர்தீப் பூரி கூறுகையில், விமான சேவை பாதைகள் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து மும்பைக்கு கட்டணம் குறைந்தபட்சம் 3,500 ஆகவும், அதிகபட்சமாக 10,000 ஆகவும் இருக்கும். இது 90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை பயணம் இருக்கும்.  

7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள வழிகள்...

40 நிமிடங்களுக்கும் குறைவான நேரங்கள்
40 முதல் 60 நிமிடங்கள் பயண வழிகள்
60-90 நிமிடங்கள் பயண வழிகள்
90 முதல் 120 நிமிடங்கள் பயண  வழிகள்
2 முதல் 2.50 மணி நேரம் செல்லும் வழிகள்
2.50 முதல் 3 மணி நேரம் செல்லும் வழிகள்
3 முதல் 3.5 மணிநேரம் பயண வழிகள்

வாடகைக்கு முக்கியத்துவம்:
முன்பு ஒவ்வொரு விமான நிறுவனங்கள் தங்கள் விதிப்படி, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர்.  ரயில் கட்டணங்களை மனதில் வைத்து மக்களுக்கு சிரமமில்லாத  கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றி சிந்தித்துள்ளோம் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார். நாங்கள் உண்மையான கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இதனால் யாருடைய வணிகமும் எந்த சிரமத்தையும் சந்திக்காது.

சமூக தொலைவு எப்படி?
நடுத்தர இருக்கையை காலியாக வைத்திருப்பது குறித்த கேள்விக்கு ஹர்தீப் பூரி கூறுகையில், விமானத்தின் போது நடுத்தர இருக்கை காலியாக இருக்காது. ஒவ்வொரு விமானத்திற்கும் பிறகு விமானம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் முன்னெச்சரிக்கை பரிசோதனை எடுக்கப்படுகிறது. நடுத்தர இருக்கை காலியாக இருந்தால் அதன் கட்டணம் பயணிகளுக்கு செல்லும்.

200 கூடுதல் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
ஊரடங்கு  4.0 க்குப் பிறகு ஜூன் 1 முதல் 200 கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக, டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல் 2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. நேற்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரியும் மே 25 முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என அறிவித்தார்.

Trending News