Karnataka Election Result DK Shivakumar: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும், காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே ஒரு மாநிலமான கர்நாடகாவும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு கைமாறியுள்ளது. மேலும், இந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டதால், பாஜகவின் ஆதிக்கம் குறைவதாகவும் கூறப்படுகிறது.
கொண்டாட்டத்தில் காங்கிரஸ்
கர்நாடக தேர்தல் முடிவுகளையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், பாஜக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக டி.கே. சிவகுமாரை (61) தேர்வு செய்ய வேண்டும் என கட்சியின் பெங்களூரு தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும் படிக்க | மக்கள் வாக்களிக்காவிட்டால் என்ன? ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவின் மாஸ்டர் பிளான்
3 ஆண்டுகள் தூக்கமில்லை
அந்த வகையில், தேர்வு முடிவுகளில் காங்கிரஸின் தொடர் முன்னிலையை அடுத்து அக்கட்சியின் கர்நாடகத் தலைவர் டிகே சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது பேசிய அவர்,"கர்நாடகாவை நிச்சயம் கைப்பற்றுவோம் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உறுதியளித்தேன்.
#WATCH | Karnataka Congress President DK Shivakumar gets emotional on his party's comfortable victory in state Assembly elections pic.twitter.com/ANaqVMXgFr
— ANI (@ANI) May 13, 2023
சிறையில் என்னை சந்திக்க சோனியா காந்தி வந்ததை என்னால் மறக்க முடியாது. காங்கிரஸ் அலுவலகம் எங்கள் கோவில். அடுத்த கட்ட முடிவை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம். எனது தலைவர் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். அன்று முதல் அதாவது மூன்று ஆண்டுகளாக நான் தூங்கவில்லை. சித்தராமையா உட்பட எனது மாநிலத்தில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இது எனது வெற்றி மட்டும் அல்ல" என்றார்.
மோடிக்கு எதிரான அலை
75 வயதான சித்தராமையா, முதல்வர் பதவிக்கான போட்டியில் சிவகுமாரின் முக்கிய போட்டியாளராக உள்ளார். "இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்பினர். இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை" என்று சித்தராமையா கூறினார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த 2 மணி நேரத்துக்குள் கர்நாடகாவில் காங்கிரஸ் பல தொகுதியை வென்றுவிட்டது. குறைந்தபட்சம் 120 இடங்களிலாவது வெற்றிபெறும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) இழப்பில், காங்கிரஸ் கட்சி பெரும் லாபம் ஈட்டியதாகத் தோன்றியது.
மீழுமா பாஜக?
தற்போதைய பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டது, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் எழுச்சி பெறும் என்றும் அக்கட்சி தரப்பில் கூறப்பட்டது. "பிரதமர் மற்றும் பாஜக தொண்டர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டும், எங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. முழு முடிவுகள் வந்தவுடன் நாங்கள் விரிவான பகுப்பாய்வு செய்வோம். மீண்டும் வருவதற்கான எங்கள் முன்னேற்றத்தில் இந்த முடிவை எடுத்துக்கொள்கிறோம். லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெறும்" என முதலமைச்சராக இருந்து பதவி விலக உள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மேலும் படிக்க | கர்நாடகாவை ‘கை’ப்பற்றும் காங்கிரஸ்... வெற்றி பெற உதவிய உத்திகள் இவை தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ