இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம் செய்யப்படுவதாக கடந்த செவ்வாய் அன்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று இந்திய கடலோர காவல்படை இயக்குநராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய கடலோர காவல்படை இயக்குநராக இருந்து ராஜேந்திர சிங்கின் பதவி காலம் இன்று (ஜூன் 30) முடிவடையும் நிலையில், இவரது பணியிடத்தை நிறப்ப தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Director General K Natarajan took over as the new chief of the Indian Coast Guard today, replacing Rajendra Singh, who retired today. pic.twitter.com/iu5RaflVEu
— ANI (@ANI) June 30, 2019
மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த கே.நடராஜன் வரும் ஜூலை 1(நாளை) முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.