ஜம்மு-காஷ்மீர்: ஆயுதங்கதை கீழே போட்டுவிட்டு திருந்தி வாழ நினைக்கும் தீவிரவாதி மற்றும் பயங்கரவாதிகளுக்கு புதிய நான்கு இலக்க தொலைபேசி எண்ணை சிஆர்பிஎப் வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து, நாட்டுக்கு எதிராக நாசா வேலைகளில் ஈடிபடுவதாக அண்மையில் கூறப்பட்டது. இதனால் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிரவாத இயக்கங்களில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து திருந்தி வாழ நினைக்கும் இளைஞர்களுக்காக பிரத்யேக தொலைபேசி சேவையும் சிஆர்பிஎப் அறிமுகம் செய்துள்ளது.
சரணடைய விரும்பவோர் 1441 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.