டெல்லி/இங்கிலாந்து: கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 14 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது.
2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை கடந்த 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் விளையாடிய முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியின் கிளவுஸில் இந்திய பாரா ஸ்பெஷல் போர்ஸின் முத்திரையான ‘பலிதான்’ இடம் பெற்றிருந்தது. பலிதான் என்றால் தியாகம் என்று அர்த்தம் ஆகும். '
இந்தியா ராணுவ வீரர்களின் தியாகத்தை குறிக்கும் வகையில் கிளவுஸ் அணிந்திருந்த தோனியின் தேசப்பற்றை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ராணுவ முத்திரையுடன் எம்.எஸ்.தோனி அணிந்திருக்கும் கிளவுஸ் விதிமீறல் செயல் ஆகும். எனவே அதனை உடனடியாக நீக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு ஐசிசி உத்தரவிட்டது.
ஆனால் ஐசிசியின் உத்தரவை நிராகரித்த இந்திய கிரிக்கெட் வாரியம் ராணுவ முத்திரையை நீக்க முடியாது எனக் கூறியுள்ளது. இந்த முத்திரை இந்தியாவின் உணர்வை வெளிப்படுவதாகும். யாரையும் புண்படுத்தும் விதமாகவோ, வியாபாரம் நோக்கத்திற்க்காகவோ வைக்கப்படவில்லை. ஏற்கனவே இதுக்குறித்து ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என பிசிசிஐ அமைப்பின் நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனியின் கையுறை குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) பிசிசிஐ ஆலோசனை செய்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ராகுல் ஜோரி இங்கிலாந்து செல்லவார். அங்கு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பார் என முடிவு செய்யப்பட்டது.