சபரிமலையின் ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பையொட்டி மூன்று நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், மலையாளத்தில் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பான இன்று கோவில் திறக்கப்படுகிறது.
கோவில் திறக்கும் தினமான இன்று பூஜைகள் எதுவும் நடத்தப்படாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை முதல், 21ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்
சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | பண்டிகை காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த அரசு! இவற்றுக்கெல்லாம் இனி அனுமதி!
கோவில் திறந்திருக்கும் இந்த 5 நாட்களிலும் சுவாமி ஐயப்பனுக்கு படிபூஜை, நெய் அபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, கலபா அபிஷேகம், புஷ்பா அபிஷேகம் ஆகியவை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடை சாத்தப்பட்டு நவம்பர் 2ஆம்தேதி சித்திரா விஷேசத்துக்காக மீண்டும் திறக்கப்படும் எனவும், அதன்பின் 3ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டு, நவம்பர் 15ம் தேதி மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR