2-வது நாளாக டெல்லி, என்.சி.ஆர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்!!

வட மாநிலங்களில் பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Last Updated : Dec 1, 2016, 12:43 PM IST
2-வது நாளாக டெல்லி, என்.சி.ஆர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்!! title=

புதுடெல்லி : வட மாநிலங்களில் பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது நாளாக தலைநகர் டெல்லியில் நீடிக்கும் இந்த பனிமூட்டத்தால் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 50 ரயில் சேவை மற்றும் சில விமான சேவை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் முகப்பு விளக்கு ஒளிரவிட்டாலும் சரியாக பார்க்க முடியாத காரணத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக முடங்கியுள்ளது. 

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்று அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது. 

டெல்லி என்சிஆர் மற்றும் ஹரியானா பகுதியான குருகிராம், பரிதாபாத், ஜஜ்ஜார், ஹிசார், பிவானி, சோனிபட், பானிபட், கர்னால், ரோஹ்தக்கில் அதிக அளவு பனிமூட்டம் இன்று காணப்பட்டது.

முன்னதாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பனி காரணமாக விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நிறுத்த வைக்க பட்ட விமானங்கள் செயல் பட துவங்கியது. ஐந்து விமானங்கள் இதுவரை திருப்பிவிடப்பட்டன, மற்றும் சில விமானங்கள் தாமதமாக பட்டது.

Trending News