புதுடெல்லி: டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணத்தால் சாதாரண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் குளிர் காலத்தையொட்டி அங்கு கடும் பனி பொழியத் துவங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவினால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளன. வாகன ஓட்டிகளில் எதிரே வரும் வண்டிகள் தெரியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
Delhi shrouded under dense blanket of #fog pic.twitter.com/8p70HpcsP6
— ANI (@ANI_news) January 30, 2017
இந்நிலையில், இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியை வாட்டி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, டெல்லிக்கு வரும் 28 ரயில்கள் தாமதமாக வந்து சேரும் எனவும், 10 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரு ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் டெல்லியில் புறப்பட தாமதமானது. இந்நிலையில் மிக அதிக குளிர் ஏற்படும்.
#WATCH: National capital, Delhi covered under thick fog blanket; vehicular movement affected. pic.twitter.com/OiLBivTNoY
— ANI (@ANI_news) January 30, 2017