ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.
கடந்த 2014-ல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, பிரிவினையின்போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்து வந்தார், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
Live from my day-long hunger strike against the central government, New Delhi. #DharmaPorataDeeksha #APDemandsJusti… https://t.co/YGcWFQPP63
— N Chandrababu Naidu (@ncbn) February 11, 2019
அதைத் தொடர்ந்து ஆந்திர கட்சித்தலைவர்கள் தொடர் போராட்டத்த்தில் ஈடுப்பபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முடிவு செய்துள்ளார்.
‘தர்ம போராட்டம் தீக்ஷா’ எனப் பெயரிட்டுள்ள இந்த போராட்டத்தை நடத்துவதற்கு இரண்டு ரயில்களில் தம்மாநில மக்களுடன் சந்திரபாபு நாயுடு டெல்லி புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஆந்திரபவனில் தனது போராட்டத்தை சந்திரபாபு நாயுடு துவங்கினார். இப்போராட்டத்தில் மாநில அமைச்சர்கள், தெலுங்குதேச எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளனர். மாலை 8 மணி வரை போராட்டம் நடத்தவுள்ளார். முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்-ல் சந்திரபாபு நாயுடு மரியாதை செலுத்தினார்.