வடமாநிலங்களில் வாட்டியெடுக்கும் கடும் குளிர்... இயல்புவாழ்க்கை பாதிப்பதால் மக்கள் கடும் அவதி....
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அளவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. காற்று மாசு அளவு, இவ்வாறு அதிகளவு பதிவாவது, இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும்.
நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரும், காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகின்றன. ஏற்கனவே, காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி வாசிகளுக்கு, கடுங்குளிர் பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது.
குளிரான தட்பவெப்ப நிலையால், காற்று மாசு, குறைவதற்கான வாய்ப்பு முழுதாக குறைந்துள்ளது. இதனால், காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. டெல்லியில், நேற்று பதிவான காற்றின் தரக் குறியீடு 446 ஆக உள்ளது.
இவ்வாறு, காற்றின் தரக்குறியீடு, அபாயகரமான அளவு என்பதை சுட்டுவது, இந்தாண்டில், இது இரண்டாவது முறையாகும்.