டெல்லி, என்.சி.ஆரரில் கடும் பனிமூட்டம்- ரயில், சாலை, விமான போக்குவரத்து பாதிப்பு

டெல்லி, என்.சி.ஆர் உட்பட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பனிமூட்டம் அதிகளவில் உள்ளது.

Last Updated : Nov 30, 2016, 09:51 AM IST
டெல்லி, என்.சி.ஆரரில் கடும் பனிமூட்டம்- ரயில், சாலை, விமான போக்குவரத்து பாதிப்பு title=

புதுடெல்லி: டெல்லி, என்.சி.ஆர் உட்பட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பனிமூட்டம் அதிகளவில் உள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால் டெல்லி மற்றும் லக்னோ ஆகிய விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய அல்லது தரையிறங்க வேண்டிய விமன சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி ரயில் நிலையம் மூலம் இயங்கும் சுமார் 40 ரயில்கள் பனிமுட்டத்தின் காரணமாக தாமதமாக செயல்படுகிறது.

ஸ்கை மெட் படி டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மேலும் சில நாட்கள் பனிமுட்டம் காணப்படும்.

மேலும் காலை 6 மணி அளவில் பாலம், சாகெத், எய்ம்ஸ், தவுலா கான், ஈஸ்ட் ஆப் கைலாஷ், நொய்டா மற்றும் பரிதாபாத் பகுதிகளில் பனிமுட்டத்தின் அளவு மிகவு அதிகமாக காணப்பட்டதாக ஸ்கை மெட் தெரிவித்துள்ளது.

Trending News