IRCTC ஊழல்: லாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது பாட்டியலாலா நீதிமன்றம்

IRCTC உணவக ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி பாட்டியலாலா ஹவுஸ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு! 

Last Updated : Dec 20, 2018, 01:30 PM IST
IRCTC ஊழல்: லாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது பாட்டியலாலா நீதிமன்றம் title=

IRCTC உணவக ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி பாட்டியலாலா ஹவுஸ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு! 

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 - 2009 ஆம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றிவந்தார். தனது பதவிகாலத்தில் ரெயில்வேயின் IRCTC-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் IRCTC-ன் அப்போதைய அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. 

இந்நிலையில், இது தொடர்பாக லாலு, அரவது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் லாலு மனுதாக்கல் செய்தார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி லாலுவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.

 

Trending News