டெல்லி தேர்தல் பாஜகவின் 10 முக்கிய வாக்குறுதிகள்... மாவு, புல்லட் ரயில்...

டெல்லி தேர்தல் அடுத்து பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்கள் டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய 10 வாக்குறுதிகள் என்ன என்று பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2020, 05:50 PM IST
டெல்லி தேர்தல் பாஜகவின் 10 முக்கிய வாக்குறுதிகள்... மாவு, புல்லட் ரயில்... title=

புது டெல்லி: டெல்லி தேர்தலுக்கான பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ இரண்டு ரூபாய் என்ற விகிதத்தில் நல்ல தரமான மாவு வழங்கப்படும். ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை வழங்குவதன் மூலம் விதியை மாற்றுவதாக பாஜக உறுதியளித்துள்ளது. பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பத்தின் முதல் 2 சிறுமிகளுக்கு 21 வயதாகும் போது அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித்தொகையை  பாஜக அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த பெண் மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டி வழங்குவதாக உறுதியளித்து உள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நிதி ரீதியாக பலவீனமான சிறுமிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கூட்டாக இணைந்து டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டனர். அப்பொழுது பேசிய மத்திய அமைச்சர் கட்கரி, "தேசிய தலைநகரின் வளர்ச்சிக்காக கட்சி 'புல்லட் ரயில்' இயக்கும் என்று கூறினார். மேலும் கூறுகையில், 'பாஜகவின் வரலாறு டெல்லியுடன் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் தலைவிதியை பாஜக மாற்றும் என்றார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்:
டெல்லியை முழுவதுமாக டேங்கர் தண்ணீர் லாரி இல்லாததாக மாற்றுவதன் மூலம், 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக் குழாயிலிருந்தும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று பாஜக தீர்மானக் கடிதத்தில் கூறியுள்ளது. டெல்லியில், தொங்கும் கம்பிகள் இல்லாமல், நிலத்தடி பணிகள் விரைவாகவும் முன்னுரிமையுடனும் செய்யப்படும்.

அங்கீகரிக்கப்படாத காலனிகளின் வளர்ச்சி:
மகளின் திருமணத்திற்காக ஏழை விதவை பெண்களுக்கு 51 ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்க பாஜக கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் குடியிருப்பாளர்களுக்கு உரிமைகளை வழங்கிய பின்னர், இந்த காலனிகளின் சரியான வளர்ச்சிக்கு ஒரு காலனி மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.

மாசுபாட்டைக் குறைப்பதாக உறுதி:
டெல்லியில் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசுடன் இணைந்து அனைத்து முயற்சிகளும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. டெல்லியில் மாசுபாட்டைக் குறைக்க மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்படும். யமுனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து அபிவிருத்தி செய்ய டெல்லி யமுனா மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.

10 லட்சம் வேலைகள்:
டெல்லியின் மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 58 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வேலை உத்தரவாதம் கிடைக்கும். இது தவிர, 5 ஆண்டுகளில் குறைந்தது 10 லட்சம் வேலையற்றவர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பத்து வாக்குறுதிகள்:
1. ஏழைக் குடும்பங்களுக்கு கிலோவுக்கு 2 ரூபாய் என்ற விகிதத்தில் கோதுமை மாவு கிடைக்கும்.
2. ஏழைக் குடும்பங்களில் படிக்கும் சிறுமிகளுக்கு ஏலக்ட்ரிக் ஸ்கூட்டிகள் இலவசமாக வழங்கப்படும்.
3. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.
4. பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பத்தின் முதல் இரண்டு இரண்டு சிறுமிகள் 21 வயதாகும்போது ரூ.2 லட்சம் உதவித்தொகை.
5. 1984 கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களில் ஒரு குழந்தைக்கு வேலை வழங்கப்படும். கலவரத்தில், விதவை பெண்களின் மாத ஓய்வூதியம் ரூ .2500 லிருந்து ரூ .3500 ஆக உயர்த்தப்படும்.
6. டெல்லி முழுவதுமாக தண்ணீர் டேங்கர் லாரி இல்லாததைக் கொண்டாடுவதன் மூலம், 2024 ஆம் ஆண்டு அளவில், ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான நீர் வழங்கப்படும்.
7. ஏழை விதவை பெண்களின் மகளின் திருமணத்திற்கு அரசாங்கம் 51 ரூபாய் சிறப்பு பரிசு வழங்கும்.
8. ஊனமுற்றோர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் தற்போதுள்ள ஓய்வூதிய அளவு அதிகரிக்கப்படும்.
9. 5 லட்சம் ரூபாய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் திட்டம் டெல்லியில் செயல்படுத்தப்படும்.
10. டெல்லியில் 10 புதிய கல்லூரிகள் மற்றும் 200 புதிய பள்ளிகள் திறக்கப்படும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News